Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Short Fictions – சிறு புனைவுகள்

உதிர்ந்த இசைச்சொல்

(01)   பேகன் இறந்த இருபத்தாறாவது வருடத்தின் கனத்த பொழுதொன்றில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். உடல் முழுக்க ரத்தத்தைப் பாய்ச்சி அடிக்கும் வலிமையான இதயம் தனது வலிமையை இழந்துகொண்டிருக்கின்ற இந்தக் கணம் ஓவியங்களைப்பற்றி எழுதுவதொன்றும் இனிமையானதல்ல. அடுத்த தெருவில் இதயம் அடைத்து அதிகாலையில் இறந்து போன, தெரிந்தும் தெரியாததுமான ஒருவரின் ஆத்மா உடலிலிருந்து கிளம்பி இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கும் காலத்திற்குள் என்னால் எழுதுவதென்பது சாத்தியமற்ற…

தற்கொலைப்பள்ளம்

(1) எனது பின்னேரங்களை அந்தப் பாறையின் கீழ் அடுக்குகளில் தான் கழிப்பேன். அகன்ற இறுக்கமான பிடிப்புகளுடன் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொண்டிருக்கும் அந்த பாறைகள் – அவ்வளவு நீளமானவை. மென்மையான துளைகளைக்கொண்ட வயல் மண்ணில் அந்தப்பாறைகள் எப்படி இவ்வளவு வீரியமாக பற்றிக்கொண்டிருக்கின்றன என்பது எனக்கு பெரும் வியப்பாக இருக்கும். சிறுவயதில் என் நண்பன் ஒருத்தன் –…

சுடர்.

கடிதத்தை நீட்டிய போது அவன் வியப்படையவில்லை. காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து விட்டு வழமையான தனது கறுப்பும் சாம்பலும் கலந்த சீருடையை கொடியிலிருந்து எடுத்து இஸ்திரி போடும் பெட்டி உள்ள மேசைக்கு அருகில் நீளமாக இருந்த வரிசையில் அமர்ந்தான். சுற்றியிருந்த எல்லாருமே ஒவ்வொரு கையடக்க தொலைபேசிகளை வைத்து நோண்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் முகங்களும்  தொலைபேசி வெளிச்சத்தில்…

அஞ்ஞாதம். – சிறுகதை.

கண்கள் தான் அவளின் முகம். மேகலா என் சிறுவயது முதலே நல்ல நண்பி. அன்றிலிருந்து இன்று வரை எது வாங்கினாலும் பகிர்ந்துகொள்ளும் மனப்பக்குவம் எங்களிடம் இருந்தது. ஊர்த் தேர் திருவிழாவில் நான் வாங்கிக் கொடுத்த தஞ்ஞாவூர் பொம்மையை இன்றும் தான் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லிக்கொள்வாள். இரட்டை குடும்பி போட்டு ஒன்று முன்னே மற்றது பின்னே கழுதைக்…

தேவதைக்கதை. – சிறுகதை.

வீட்டு விறாந்தையின் கிழக்கு மூலையில் இருந்த மரக்கட்டில், இன்று விறாந்தையின் நடுவிற்கு கொண்டுவரப்பட்டது. நல்ல திடமான முதிரை மரத்தால் சீவி செய்யபட்டிருந்தது. அப்பப்பா சொன்னதன் படி இந்த கட்டில் என் பூட்டப்பாவின் அப்பா முதன் முதலில் பயன்படுத்தியிருந்தார். சந்ததி சந்ததியாக இந்த கட்டில் குடும்பத்தின் தலைவர்கள் வசமே இருந்தது . இந்த கட்டிலில் பெண்கள் ஏறக்கூடாது,…

ரிஷி வனம். – சிறுகதை ( திருத்தப்பட்டது )

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்படியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலையை முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன்….

எயிறு. – சிறுகதை

“அவன் கதவை தாழிட்டு கொண்டான்.” , என அந்த கதை முடிந்திருந்தது. நான் அதன் கடைசி முற்று புள்ளியை வெறித்துபார்த்துகொண்டு சில மணிநேரம் இருந்தேன். அந்த முற்றுபுள்ளியை தாண்டி அங்கால் ஏதும் எழுதப்பட்டிருக்க கூடாதா என்று மனதின் ஆழத்தில் பெரும் ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த சில மணி நேரங்களில் முற்றுப்புள்ளிக்கு அடுத்த வெற்றிடத்தில் சில…

ரிஷி வனம். – சிறுகதை

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்பிடியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலை படித்து முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு…

காகங்கள் – சிறுகதை

“பேர்? நம ?” “சுனித்த கமகே” “சுன்னித நா…… சுனித்த.. சுனித்த…” “அய்யா சுன்னித்த இல்லே சுனித்த ” நெற்றியிலிருந்து வியர்வைத்துளிகள் அவரின் இமைகளை நனைத்துக்கொண்டு இடக்கண்ணின் கூர்மையான ஓரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. கண்ணாடியினை கழற்றி எரிச்சலூட்டிய இடக்கண்ணை மெதுவாக தேய்த்துக்கொண்டார் அந்த எண்பது மதிக்கத்தக்க கிழவர். மீண்டும் குனிந்து டைப் ரைட்டர்ஐ கைகளால் அழுத்த தொடங்கினார்….

”-COOK”

இருட்டு இன்னும் ஆழப்படுத்தி கொண்டிருந்து. லைட்டர் வெளிச்சங்கள் மட்டும். ஐந்தாறு சூரியன்கள் இருப்பதுபோல். எம்மில் எத்தனை பெயர் என்று சரியாக தெரியவில்லை. என்னோடு காலையில் அண்ணளவாக அறுபது பேர் வேலை செய்வார்கள். யாரும் என் இனத்தவன் இல்லை. மங்கோலியர்களும், நீக்கிரோக்களும் , அடிமட்ட அமெரிக்கர்களும் தான். என் கசினோ பழக்கம் என்னை இந்த கேவலமான தொழிலுக்கு…

Back to top