Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Short Stories Reviews – சிறுகதைகளின் மறுபார்வைகள்

அம்மாவின் காடு – தேவிபாரதி

ஆதாரமற்ற நெடுங்கனவொன்றின் மீதமரும் புனைவு என் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளோடு உரையாடத் தொடங்குகிறது. புனைவுலகு அகன்ற ஆழி. மிகத் தளர்வான கரைகளைக் கொண்ட ஆறு. எந்தக் குறிக்கோளும் பிரக்ஞையுமற்று செந்தரையின் குளிர்ச்சியில் நிரந்தமாய் உறங்கிப்போன எனக்கு, மிக நிதானமான உலகொன்றையும் அவற்றிக்குத் தோதான உணர்வுகளையும் உருவாக்கித்தந்தது புனைவு. வாழ்க்கையின் நிரந்த உணர்வுகள் புனைவிற்குள் அவற்றிக்கான மெய்வெளியினை…

குர்ரத்துலைன் ஹைதர் – உதிரும் இலைகளின் ஓசை

குர்ரத்துலைன் ஹைதர் மிகவும் கவனத்துக்குள்ளான – கவனத்திற்கு உள்ளான அளவு கொண்டாடப்பட்ட எழுத்தாளர். குர்ரத்துலைன் ஹைதர் – கேப்ரியல் கார்சியா மார்கஸின்   சமகாலத்தவர். கேப்ரியல் கார்சியா மார்கஸ் போலவே தனக்கென பிரத்தியேகமான கதை சொல்லல் முறையினைக் கையாண்டவர். தமிழில் ஜெயகாந்தனுக்கும் அகிலனுக்கும் கிடைத்த ஞானபீட விருதை 1989 ஆம் ஆண்டும் பத்ம பூஷன் விருதை2005 உம்…

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka…

“கூனல்” – தெளிவத்தை ஜோசப் – மௌனிக்கும் குரல்கள்.

என்னதான் நாங்கள் சமத்துவமும் சமஉரிமையும் பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் திரிந்தாலும் நம் கண்முன்னே இன்னும் காலா காலமாக உரிமைகளை சரிவரப் பெறமுடியாத  மலையக சமூகத்தின் ஆதங்கங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவே இல்லை. தொழிலாளர் வர்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவந்து இன்று வரை தொழிலாளர் வர்க்கமாகவே வாழ்ந்து விட்டு செல்லும் துர்பாக்கிய நிலையில் மலையக மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். தினக்கூலிக்கும்…

மாண்ட்டோ படைப்புகள்.- சிறுகதை 1 – “காலித்” – ஊடறுக்கும் மனப்பிறழ்வுகள்.

எங்கள் எல்லோரிடமும் அழிக்கமுடியாத, அதே நேரத்தில் காரணமும் தெரியாத ஒரு வழக்கம் இருந்துகொண்டு வருகின்றது. ஒரு நேரத்தில் அதிகம் சிரித்தால் அடுத்து அதே அளவு அழவேண்டிவரும். அதற்காக எமது மகிழ்ச்சியான தருணங்களை வலுக்கட்டாயமாக குறைத்துக்  கொண்டாடுவோம். இது சிறியவர்களில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பின்பற்றப்பட்டு வருகின்றது. பௌதீக ரீதியில் சமானன எதிர் வினை எதற்கும்…

ஒரு மணி நேரம் முன்பு. – முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் நிறைவு.

ஆ.முத்துலிங்கம் ஈழ இலக்கியத்தின் முக்கிய அடையாளம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. ஒரு கதை சொல்லியின் மிக தேர்ந்த வடிவமே முத்துலிங்கம். கதைகளை வாசகர் சிரமப்பட்டு அணுகாமல் மெல்லிய நீட்சியுடன் விரிகின்ற நுட்பமான கதைசொல்லல் அவரது. முத்துலிங்கத்தின் பல கதைகளின் முடிவும் அதனால் வாசகனுக்கு  நீளுகின்ற வாசிப்பின் பின்னான அமைதியும் அவரின் எழுத்தாளுமையின் வலிமையே….

நிதர்சனம். அன்டன் செக்காவின் வலிமையான மனப்பதிவுகள்

தி இந்துவின் 2016ஆம் ஆண்டின் தீபாவாளி சிறப்புமலரில் பிரசுரமாகியிருந்த அன்டன் செக்காவ் இன் வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எனக்கு சில நிதர்சன உண்மைகளை வெளிக்காட்டியது. வழமையான செக்காவின் சிறுகதைகள் போலவே நுண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஒரு படைப்பு தான் வலிமையான மனப்பதிவுகள்.   எங்கள் எல்லோரிடமும் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. யாரும் அறவே…

எளிமை சொல்லும் அனுபவங்கள் – அகளங்கன்

சொந்த வட்டார வழக்கில் ஒரு கதையை வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒன்றிப்பு ஆலாதியானது. அத்தோடு கதைக்களமும் சம்பவங்களும் கண்களின் முன்னே இருக்கும் போது கதைசொல்லி ஒரு வீதியினூடாக கதைமாந்தர்களை அழைத்துச் சென்றால் வாசகனின் மனம் அதன் கிளைவீதிகளை எல்லாம் நினைவுபடுத்திக்கொள்ளும். இது வீதிகளைப் போலவே சம்பவங்களுக்கும் பொருந்தும். ஒரு சில சம்பவங்களில் நாம் முதலாம் நிலையிலும்…

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி…

“வினோத நூலகம்” – சிறுகுறிப்பு

எந்த சிறுகதையை நான் வாசித்தபோதும் “வினோத நூலகம்” என்ற சிறுகதையை வாசித்ததில் கிடைத்த அனுபவம் அவை எதிலும் கிடைத்ததில்லை. ஜி. குப்புசாமி மொழி பெயர்ப்பில் கல்குதிரையின் கார்கால இதழ் ஆவணி புரட்டாசி 2016 இல் வெளிவந்த ஹாருகி முராகாமி இன் சிறுகதை தான் வினோத நூலகம். கதைக்கு விமர்சனம் என்றெல்லாம் எழுதமுடியாதஅளவு என்னுள் தாக்கம் செலுத்துகிறது…

Back to top