Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Poems – கவிதைகள்

பின்னிரவுகளின் மீது ஊற்றப்பட்ட மை

உண்மையின் இரைச்சல் மீது வாளிப்பாய் ஒழுகித்தூர்ந்த பின்னிரவுகளின் சாய்வுகளின் மேல் உப்பாய்க் கனக்கிறது அழியாச்சுடர். நிச்சயமான இரவொன்றில் பருவங்களால் மூத்த கிளியை துரத்திய பின்னரும் வளரும் நகமாய் உடலெங்கும் ஊர்கிறது. நிராசைப்போர் பற்றி எரிகிறது நகரம், ஒவ்வொருமுறையும் தன் நிறத்தை மாற்றும் ஒக்டோபஸின் மையாய் காலம் நிலமெங்கும் ஊர்ந்து இரவில் இருட்டுக்குள் சுருளும் வரை காத்திருந்த உப்புக்கோது மழையில் நீர்ந்து போகஇன்னொருமுறை அக்கிளி மையிட்டுக்கொண்டிருக்கிறது. 126 Views

கருமொழி

பூஸ், பகலைப்போலவே இரவென்பதும் பெருங்கனவு. கருமை நித்திலமான சுடர் உன் நெடி பாவும் இவ்விரவு ஓய்ந்த வெள்ளமொன்றில் சேகரமாயிருக்கும் ஒளிப்போட்டுக்கள் கண்களை திறந்துகொண்டே நிர்பந்திக்கப்பட்ட கதிரையிலிருந்து உன்னை மீட்கிறேன் இரவொரு சொல் அல்லது மௌனம் பூஸ், இரவொரு இசை நிறைவேறா சபதங்களின் மொழி. 332 Views

கரையும் வெயில்

தலையில்லா பெருச்சாளி ஒன்றைதின்றுகொண்டிருக்கும் குட்டி எலிகள். காகக் குரலில் கரையும் வெயில் அறைக்கதவிற்கு வெளியே நிற்கும் பெயரறியா மரத்திற்குப்பல்லியென்று பெயர் வைத்தேன் வயதாகிக்கொண்டிருக்கும் பல்லியின் உச்சியில்தளிர்க்கிறது செவ்விலை  உள்ளிருட்டுபுறவெயில் காய்ந்த இலையின் கீழ்உயிர் கரைத்து வனைகிறதுசிலந்தியொன்று. 288 Views

இராச்சுழல்

(01) வெயிற்காலத்தில் எலிகளும் மழைக்காலத்தில் மசுக்குட்டிகளும் எங்கள் வீடுகளுக்குள் வந்துசேர்ந்துவிடுகின்றன (02) பனிக்கால வானவில் பரப்பிய நிழற்ச் சுவர்களில் அவை ஊர்வதையும் உண்பதையும் புணர்வதையும் பறப்பதையும்  இறப்பதையும் பார்க்கவே எனக்கு வயதாகிவிடும் அன்பே (03) எட்டாவது குடம் நீரினை நீயோ நானோ வார்க்கும் போது எம்மீது மிதந்தது பொன்னிறப் பூச்சி உன்னிடம் மூன்று என்னிடம் ரெண்டு நீ சுற்றிவிட்ட கால ஏட்டின் மையிருட்டில் பூரான் பற்றிக்கொண்ட அவற்றில் ஒன்றின் இறகைப் பியத்துதலையை நசுக்கி பின்னர் இனிச் சொல்லாதே அது ஒரு பொன்னிறப்…

மந்திரம் விசுறப்பட்ட தடங்கள்

காட்டின் சுருண்ட இருள்களில் மந்திரம் விசுறப்பட்ட தடங்கள் ஒவ்வொன்றிலும் இடது உன் சிறகின் முத்தம் வலது உன் கண்களின் நீலம் பெய்யும் என் கனாவில் தீரா ஊற்று நீ நாம் நீண்டு வளரும் வானவில் கனிந்த சுளைகள் ஊறித் தோயும்நீர்த்தாவரம் நீ வெப்பப் பறவையின் சிறகுகளில் உறைந்து போன பனி நீருக்கடியில் நகரும் நதி என்னுடல் மீதேறும் வெண்நாகமே, ஒவ்வொரு ஆட்டத்தின் முன்னரும் கலைப்படும் சீட்டுகளைப் போன்ற என் ஞாபகங்களின்…

இருதிணை – ஆழ்கடல் மரபு – அனார் மீக்காயீல் பிரதிகள்

யாத்திரிகன் ஷீத் – மீக்காயீல் – மற்றும் மூன்று சிறுவர்கள் – மீக்காயீல் பிரதி – புறத்திணை நீல இமைகளைக் கொண்ட ஷீத் தன் விரல்களால் உவர்நீரினை மேவி லைட்கற்களை அள்ள எத்தனித்தான். அவன் உள்ளங்கைகளிரண்டிலுமிருந்து அவிழ்ந்த ரேகைகள் நீண்ட கடற்பாம்புகளைப்போல கடலுக்குளிறங்கின. அவனுடைய கைப்பிடிக்குள் அடைய மறுத்த லைட்கற்கள் வெண்ணுரைக்குள் நழுவி மறைந்துபோயின. இன்னொரு…

போ – ஹியூகோ – நான் மற்றும் கடவுள்

கடவுளின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் இரும்பு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி நான் வீதிக்கரை ஓரமாக தேய்ந்து தேய்ந்து ஊர்கிறேன். கடவுள் டீக்கடையில் நிற்பதாக எனக்கு முன்னால் இன்னொரு இரும்பு மூட்டையுடன் ஊர்ந்துகொண்டிருக்கும் ஆலன் போ சொன்னார். எனக்குப் பின்னால் ஊர்ந்து கொண்டிருந்த விக்டர் ஹியூகோவிற்கும் அதையே சொன்னேன். ஆலன் போ ஒரு சந்தி முடக்கில் இயலாமல்…

ஒழிதல்

என் அறையில் என்னைத்தவிர மூன்று பிசாசுகள் உள்ளன;   எல்லாமே என்னோடு நன்றாகப் பேசும், அதனால் ஒன்றும் சத்தம் கேட்கப்போவதில்லையே.   எல்லாம் என்னோடு சேர்ந்து வாசிக்கும், பெரும்பாலும் என்னை விட அதிகமாக.   எப்போதும் அழுதபடியே இருக்கும், அவை நினைத்தபடி அவற்றால் வாழமுடியாததை எண்ணி.   அவை ஒரு போதும் தூங்காது, என்னை தூங்கவும்…

பாதி வெளிச்சம்.

பாதி வெளிச்சம் உள்ள ஒரு அறையினைத் திறந்து நீண்ட நேரம் காத்திருக்கிறேன், செக்கு நாற்றம் வீசும் மேனியின் மேல் செம்மஞ்சள் காவி ஒன்றை சுற்றியபடி : சுற்றல் , அலைதல் , தோண்டுதல் , பிரித்தல் , கிழித்தல். இந்த நாற்றம் வீசும் கந்தல் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தான் என்னை செதுக்கியது, மன்னிக்கவும் –…

அறையைப் பற்றி எழுதுதல்.

எல்லோரும் அவர்களின் அறையைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்? நான் காணாத எவற்றையெல்லாம் அது வைத்திருக்கிறது? ஒரு நாளில் சராசரியாக பத்து மணித்தியாலங்கள் அதற்குள் தூங்குகிறேன் ; இரண்டு மணித்தியாலங்கள் அதற்குள் தூங்குவது போன்று புரள்கின்றேன். அத்தனை நேர சொப்பனத்திலும் காணாத ஒன்றை, மிகுதி நேர விழிப்பிலும் காணாத ஒன்றை, அப்படி…

Back to top