Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Magazines – இதழ்கள்

நின் கைவசம்  என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய்…

சூன்ய மினுப்பு

(01) கதைக்கற்றைகளாக எழுதப்படாத வரலாற்றினை எழுதி, மறைத்து வைக்கப்படுகின்ற சம்வங்களை எழுதி அல்லது தொன்மங்களை, பண்பாட்டை, துரோகத்தை, இனஅழிப்பை, பகைமையை என்று எல்லாவற்றையும் எழுதி அச்சிட்டு கனதியான புத்தகங்களாக அடுக்கிவைக்கப்பட்ட அலமாரியில் நகுலனின் நாய்களும் வந்து சேர்ந்தது. ” கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய்…

விநோத நூலகத்தின் புதிர்வழிப் பாதைகள்

(01) நீங்கள் யாராவது பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி இசையைக் கேட்டதுண்டா? ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய பல்வேறு வகையான உணர்வுகளின் கலவை. கண்களை மூடிக்கொண்டு காதுகளால் பார்க்கவும் கேட்கவும் நுகரவும் உணரவும் கூடிய இசைத் துணுக்குகள் ஏராளமாகப் பரவிக்கிடக்கிறது. இது வரை பதினாறு  முறை கேட்டிருப்பேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது பதினேழாவது முறையாக –…

"ஒழுங்குபடுத்தலின் வன்முறை" – உரையாடல்களின் அவசியம்

ஆறாவது புதிய சொல்லில் அருண்மொழிவர்மன் எழுதிய “ஒழுங்குபடுத்தலின் வன்முறை” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, ஏழாவது புதிய சொல்லில் எனது கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சமகால சூழ்நிலைகளில் ஒழுங்குபடுத்தலின் வன்முறை பற்றிய உரையாடல்கள் அவசியப்படுகின்றன. பொதுஜனங்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் பரவலாக்கப்படவேண்டும். எட்டாவது புதிய சொல் வருகை தந்த நிலையிலும் பொதுவெளி உரையாடல்கள் எதுவும் இடம்பெறாமை வருத்தமளிக்கிறது. அருண்மொழிவர்மனின்…

என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/   102 Views

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள் உங்கள் கூக்குரல்களால் எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ” – எஸ். போஸ் ” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ” – காசுவோ இஷிகுரோ உன்னதம் இதழில் வெளிவந்த…

குடிமைகள் –  சாதியமும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்.

ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர்  ஒருவரின் தேடல்.  வாசகர் ஒருவர்  இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத…

Back to top