Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Introductions – அறிமுகங்கள்

நின் கைவசம்  என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய்…

அம்மாவின் காடு – தேவிபாரதி

ஆதாரமற்ற நெடுங்கனவொன்றின் மீதமரும் புனைவு என் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளோடு உரையாடத் தொடங்குகிறது. புனைவுலகு அகன்ற ஆழி. மிகத் தளர்வான கரைகளைக் கொண்ட ஆறு. எந்தக் குறிக்கோளும் பிரக்ஞையுமற்று செந்தரையின் குளிர்ச்சியில் நிரந்தமாய் உறங்கிப்போன எனக்கு, மிக நிதானமான உலகொன்றையும் அவற்றிக்குத் தோதான உணர்வுகளையும் உருவாக்கித்தந்தது புனைவு. வாழ்க்கையின் நிரந்த உணர்வுகள் புனைவிற்குள் அவற்றிக்கான மெய்வெளியினை…

குர்ரத்துலைன் ஹைதர் – உதிரும் இலைகளின் ஓசை

குர்ரத்துலைன் ஹைதர் மிகவும் கவனத்துக்குள்ளான – கவனத்திற்கு உள்ளான அளவு கொண்டாடப்பட்ட எழுத்தாளர். குர்ரத்துலைன் ஹைதர் – கேப்ரியல் கார்சியா மார்கஸின்   சமகாலத்தவர். கேப்ரியல் கார்சியா மார்கஸ் போலவே தனக்கென பிரத்தியேகமான கதை சொல்லல் முறையினைக் கையாண்டவர். தமிழில் ஜெயகாந்தனுக்கும் அகிலனுக்கும் கிடைத்த ஞானபீட விருதை 1989 ஆம் ஆண்டும் பத்ம பூஷன் விருதை2005 உம்…

முதல்ப் புனைவு

சரியோ பிழையோ – எப்போதுமே முதன்முதல் செய்தவற்றை மீட்டிப்பார்க்கும் போது ஒரு வித சந்தோசம் உருவாகும். அதுவும் முதன்முதலில் உருவான கலைப்படைப்பு ஒன்றை மீட்டுதல் அலாதியான சந்தோசம். சரியாக இதே நாளில்த் தான் எனது முதலாவது கதையினைச் சொன்னேன். இது மிகவும் ஆரம்ப வாசிப்பு நிலையில், கதையா இல்லையா என்றெல்லாம் தெரிந்திராத போது எழுதப்பட்டது. எனது…

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka…

வாசிப்பும் பகிர்வும்.

நமது வாசிப்பு அனுபவத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாசிப்பு வேட்கை இருக்கும். நாம் நாளாந்தம் நெருக்கமான உணர்வுகளைச் சீண்டிவிடுகின்ற வாசிப்பியையும் கடந்துபோகின்றோம். வாசித்தவுடன் தொடர்பற்றுப்போகின்ற வாசிப்பையும் கடந்து தான் போகின்றோம். இதை எந்நிலை வாசிப்பு அனுபவம் கொண்டவராலும் தவிர்க்கமுடியாது. நாம் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்றாலும் அதில் பல அணுக்கமாகவும் அதே அளவு பல அந்நியமாகவும் இருந்துவிடுகின்றன….

கேட்டல் இனிது.

எங்கு அறிவுரை கேட்பது ? யாரிடம் அறிவுரை கேட்பது ? எம்மை சரியாக வழிநடத்த கூடியவர்கள் யார் ? போன்ற கேள்விகள் இந்த தலைமுறையினரிடம் பரவலாக காணப்படுகிறது. மங்கிய ஒளியினை நம்பி அதன் வழி நடத்தலின் கீழ் சென்று தமக்கான சரியான பாதைகளை தவறவிடுகின்ற ஆட்கள்தான் இந்த தலைமுறையினர்களில் அதிகம். ஒருவேளை அப்படியான தவறான வழி…

தீராத பால்யம்.

மனிதன் ஒருவனின் ஆழப்பதிந்த நினைவுகள் என்று தோண்டி எடுக்கும் போது அந்த நினைவுகளில் பல அவனின் பால்யத்தை சுற்றியே இருக்கும் என்பது நிதர்சனம். பால்யம் தீராத கனவுகளின் பெட்டகம். எல்லாருக்கும் எல்லாமும் இந்த பருவத்தில் விதைக்கப்படுவதில்லை. விதைக்கப்பட்டவை எல்லாம் சரியானவையும் அல்ல. விதைக்கப்பட்டவைக்கும் விதிக்கப்பட்டவைக்கும் தீராக் கனவுகளின் பெட்டகத்திற்குமான போராட்டம் பால்யத்தை சுவைக்க வைக்கிறது. இந்த…

Back to top