Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Common – பொது

அடிவானில் விரியும் துயர்

மூப்படைந்த எமிலாக்கு நிறப்பூச்சிட்டது போல நின்றது காலை ஐந்து நாற்பத்தைந்து ரயில். முழுமையாக திறக்காத கண்களோடு தன் உடலினைப் பார்த்துக்கொண்டிருந்தது இயற்கை. தண்டவாளத்தோடு பிணைத்திருந்த தன்னை விடுதலை செய்யுமாறு சீறிச்சினந்தது ரயில். மழைக்கு வீட்டிற்குள் மறித்துவைக்கப்பட்ட சிறுவனின் நிலை அதற்கு. அதன் இயந்திர முகத்திலிருந்து உருவான மஞ்சள் ஒளிப்பாகில் தண்டவாளம் இரண்டு நீண்ட ஈட்டிகள் போல…

ஈஸ்டர் ஞாயிறு

அன்புள்ள நண்பர்களே , ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த துயரத்தின் பின்னரான இந்நான்கு நாட்களும் மனதளவில் சோர்ந்துபோயிருக்கிறேன். என்னைச்சூழ இருந்த மனிதர்களும் ஊடகங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தம்மை வெளிப்படுத்திக்கொண்ட விதங்கள் உயிரிழப்புகளை மீறி மனதிற்குள் நோவாக குடியேறிவிட்டது. ஞாயிறன்று மொறட்டுவையில் தனித்திருந்த நாளிலிருந்து பின்னர் கொட்டஹேனா சென்று நேற்று வவுனியா திரும்பியவரை நான் எதிர்கொண்ட மனிதர்களும் அவர்களின்…

கறிமிளகாயும் சுருக்குப்பையும்

எட்வார்ட் லாவா மீதிருந்த பயத்தில் தியோ வாக்னர் என்று ஆல்ஃபிரட் பென்ட்டிங் தன் பெயரை மாற்றிச்சொன்னது போலல்ல இப்போது என்நிலை. தோமஸ் இன்னமும் உயிரோடிருக்கிறாரா என்று கேட்ட நண்பரிடம், தட்டுத் தடுமாறி ஓம் என் ஞாபக அடுக்குகளில் உயிரோடுதானிருக்கிறார் என்ற போது ஞாபகங்களையும் நியத்தையும் புனைவையும் பிரித்தறியமுடியாது தவித்தேன். பெருநாவலைப்போல உலகம் விரிவதை மெல்லிய கண்ணாடியிலான…

மீக்காயீலின் மாதுளை நிலம்

மீக்காயீல் பிறந்தான். மென்னீலமும் பொன்னிறமுமாய் அந்நிலம் விரிந்திருந்தது. பிறப்பின் பூமியென்று நெடுங்காலமாய் நம்பப்பட்டுவந்த நிலத்திலிருந்து அந்நிலம் வெகு தொலைவிருந்தது. நத்தையுடலின் மேல் மிதக்கும் கோளநிலத்தின் சாயல். அன்பின் நிலமெல்லாம் கோளந்தான். மலைகளைப்போல் பரந்தும் நீண்டும் வளர்ந்துநிற்கின்ற மரங்கள். காற்றில் வலிமையாய் சிறகுவிரித்து நிற்கும் பருந்தினைப்போல அந்நிலம் தரையுமில்லை; அந்தரமுமில்லை. அங்கு இசையுமில்லை, மணமுமில்லை. பருவங்கள் நிறங்களாய்த் தோன்றி அவ்வெளியின் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்தன. நிறங்கள் ஒவ்வொன்றும்…

தோமஸிலிருந்து புறப்படுதல் அல்லது “பொத்”தென விழுதல்.

1. என்னிடமிருந்துஎதையாவது ஒன்றை எடுத்துச் சென்றுவிடுங்கள்ஈரமான இந்தத் தரையிலிருந்துஒரு பிடி ஈரத்தையேனும் 2. என் கைகளிலிருந்து தோமஸை விலக்கிக்கொண்டுபோய் என்ன செய்யப்போகிறீர்கள்? நேற்றும் அதற்கு முன் தினமும் அதற்கும் முதல் பல நாட்களிலும் நீங்கள் என்னிடமிருந்து பிரித்துக்கொண்டுபோன என் நண்பர்கள் என்னானார்கள்? என் வைரமான பிடிப்பையும் தாண்டி நீங்கள் இழுத்துச்சென்றவர்கள் என்னிடம் மீண்டும் வருவதற்காக கூச்சலிட்டு…

தோமஸிற்குத் திவசம்

மெல்லிய சாம்பல் நிறமாக முன்காலை வெளித்திருந்தது. பருவம் தவறி சுழன்றடிக்கும் ஆடிக்காற்று பழுத்த மஞ்சள் நிற இலைகளை லாவகமாக பிடுங்கி எறிந்துகொண்டிருந்தது. அவை சருகுகளாக முற்றம் முழுக்க சிதறிக்கிடந்தன. போஃகி தன் உடலை  வளைத்து பின்னங்காலினை நக்கியது. அது தன் உடல் முழுதும் படிந்திருந்த புழுதியை பாம்பொன்றின் லாவகத்துடன் வளைத்து உதறிக் கொட்டியது. என்னை அண்மித்து…

தூர்ந்துபோன தோமஸிற்கு கடிதம்

அன்புள்ள தோமஸிற்கு,   உன் உடல் சீராக எரிந்து சாம்பலாகும் கணம் வரை எனக்கும் உனக்குமான உறவைப்பற்றி யாரிடமும் நான் சொன்னதில்லை. இப்போதும் அதற்கான தேவைகள் வரவில்லை. இங்கு எல்லோரும் அவர்களின் தோமஸை எண்ணி அவதானமாயிருக்கிறார்கள் அல்லது அது போன்று பாவனை செய்கிறார்கள். சுடுகாட்டின் வாசலில் நின்றுகொண்டும் கூட உன் இறப்பை சந்தேகப்பட்டேன். நீ இறந்ததில்…

at the drop of the hat – நான்கு கவிஞர்கள் பற்றிய அறிமுக குறிப்புகள்

  நன்றி உன்னதம் – எஸ்போஸ், தர்மினி பற்றிய கட்டுரைகள் உன்னதம் இணைய இதழில் 2017 மார்கழி 15, 23 ஆம் திகதிகளிலும் 2018 தை 10 ஆம் திகதியும் வெளியானது.   ரஷ்மி – எஸ்போஸின் கோட்டோவியம் வடலி – எஸ்போஸின் தொகுப்பின் முன்னட்டை குங்குமம் – சுகுமாரனின் புகைப்படம் முகப்புத்தகம் – மற்றைய…

பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள்…

கிழிந்த இறகொன்றின் காதல் நினைவுகள்

கருநீலப்பூச்சி   வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை….

Back to top