Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Category: Columns – பந்திகள்

பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள்…

கிழிந்த இறகொன்றின் காதல் நினைவுகள்

கருநீலப்பூச்சி   வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை….

பாதுகை – எடை இல்லாத கலை

கோமாளி கிங்ஸ் பற்றிய எனது பார்வையினை பலர் விமர்சித்திருந்தார்கள். நான்கைந்து நேரடி விவாதங்களிலும் கலந்துகொண்டேன். எனக்கு எதிராக வைக்கப்படுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் அதே கட்டுரையில் பதிலிருக்கின்றது. நான் எதிராக விமர்சிக்கிறேன் என்ற புள்ளியில் நின்று என்னை அணுகுபவர்கள் “எதற்காக விமர்சிக்கிறேன்” என்று கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இதனால் அவர்களுடனான விவாதங்கள் அயற்சியளிக்கின்றன. “எப்போது சினிமா என்ற பொழுதுபோக்கு…

அந்நியன்

தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண். அம்மம்மா வீட்டின் முன் விறாந்தையோடு சேர்ந்தாற்போல ஒரு அறையிருக்கிறது. பழைய பொருட்களை எல்லாம் அடுக்கி அங்கு வைத்திருக்கிறார்கள்.  மெத்தையில்லாத கட்டில், பழைய பாய்கள் இரண்டு மூன்று, மேல் விளிம்பால் வெடித்துப் போன கண்ணாடி, பழைய கொப்பிகளைப் போட்டு கட்டிவைக்கப்பட்ட பெட்டிகள்,  காலுடைந்த மின்விசிறி ஒன்று, என் உடுப்புகள் உள்ள ஒரு பக்கம் துருப்பிடித்து சுவரில்…

என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/   102 Views

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள் உங்கள் கூக்குரல்களால் எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ” – எஸ். போஸ் ” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ” – காசுவோ இஷிகுரோ உன்னதம் இதழில் வெளிவந்த…

ஒரு வருடம் – மறா

(01) எந்த ஒரு விடயத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து செய்யும் போது மனத்திருப்தியுடன் கூடிய முன்னேற்றம் உருவாகும் என்பதை அறிந்த சந்தர்ப்பங்களுள் எனது வலைப்பூவும் ஒன்று. சாதாரண தரம் எழுதிவிட்டு உடனேயே எல்லோரும் உயர்தரத்திற்கு தயாராக தொடங்கிவிடுவார்கள். இலங்கையில் பெரும்பாலான உயர்தரக் கல்வி தனியார் வகுப்புகளை நம்பியே இருந்தது. சிறுவயது முதல் ஒன்றாக படித்துக்கொண்டுவந்த எனது நண்பர்களிடம்…

இசை – Rohingya – அனிதா

(1) நேற்று புகையிரதப் பெட்டிக்குள் வியர்த்து விறுவிறுக்க ஏறி, தோளில் இருந்த பயணப்பையை மேலே வைத்துவிட்டு ; காலையிலிருந்து உடுத்தியிருந்த மேற்சட்டையையும் பெனியனையும் கழற்றி புதிய மேற்சட்டை ஒன்றை வேகமாக மாற்றினேன். அந்த பேட்டியில் பெரிதாக எவருமே இல்லை என்பதால் எனக்கு மாற்றுவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. சப்பாத்தைக் கழற்றி வைத்துவிட்டு, துணி ஒன்றினால் வியர்வையை…

பேரூந்து – மெடூசா – குறியீடு

(01) காலையில் அந்தரப்பட்டு என்னைத் தயார் செய்து கொண்டு அப்பாவுடன் பேரூந்து நிலையத்திற்கு யாழ்பாணம் போவதற்காக சென்றேன். பேரூந்து நிலையம் போவதற்கு முதலே பேரூந்தை இடையில் மறித்து ஏறிக்கொண்டேன். ஏறும் கணமே நடத்துனரும் பேரூந்து படியில் நின்றவரும் ஏதோ பேசிக்கொண்டனர். நான் அதைப் பொருட்படுத்திகொள்ளாமல் என் பாட்டில் ஏறினேன். படியில் நின்ற இருபத்தைந்து மதிக்கத்தக்கவர் என்னை…

Back to top