Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: April 2019

ஈஸ்டர் ஞாயிறு

அன்புள்ள நண்பர்களே , ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த துயரத்தின் பின்னரான இந்நான்கு நாட்களும் மனதளவில் சோர்ந்துபோயிருக்கிறேன். என்னைச்சூழ இருந்த மனிதர்களும் ஊடகங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தம்மை வெளிப்படுத்திக்கொண்ட விதங்கள் உயிரிழப்புகளை மீறி மனதிற்குள் நோவாக குடியேறிவிட்டது. ஞாயிறன்று மொறட்டுவையில் தனித்திருந்த நாளிலிருந்து பின்னர் கொட்டஹேனா சென்று நேற்று வவுனியா திரும்பியவரை நான் எதிர்கொண்ட மனிதர்களும் அவர்களின்…

கருமொழி

பூஸ், பகலைப்போலவே இரவென்பதும் பெருங்கனவு. கருமை நித்திலமான சுடர் உன் நெடி பாவும் இவ்விரவு ஓய்ந்த வெள்ளமொன்றில் சேகரமாயிருக்கும் ஒளிப்போட்டுக்கள் கண்களை திறந்துகொண்டே நிர்பந்திக்கப்பட்ட கதிரையிலிருந்து உன்னை மீட்கிறேன் இரவொரு சொல் அல்லது மௌனம் பூஸ், இரவொரு இசை நிறைவேறா சபதங்களின் மொழி. 239 Views

நின் கைவசம்  என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய்…

Back to top