Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: March 2018

அந்நியன்

தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண். அம்மம்மா வீட்டின் முன் விறாந்தையோடு சேர்ந்தாற்போல ஒரு அறையிருக்கிறது. பழைய பொருட்களை எல்லாம் அடுக்கி அங்கு வைத்திருக்கிறார்கள்.  மெத்தையில்லாத கட்டில், பழைய பாய்கள் இரண்டு மூன்று, மேல் விளிம்பால் வெடித்துப் போன கண்ணாடி, பழைய கொப்பிகளைப் போட்டு கட்டிவைக்கப்பட்ட பெட்டிகள்,  காலுடைந்த மின்விசிறி ஒன்று, என் உடுப்புகள் உள்ள ஒரு பக்கம் துருப்பிடித்து சுவரில்…

முன்குறிப்புகள் Earth: One Amazing Day – 01 பதின்மூன்று பெயரால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. இதில் நான் இணைப்பு அனுப்பியவர்கள் மூவர். ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் சம்பந்தமே இல்லை என்று ஒரே ஒருத்தரால் விமர்சிக்கப்பட்டது. அதுவும் நான் வலிந்து கேட்டுக்கொண்டபடியால். இன்னொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். அண்ட்ராக்டிக்கா பனிமலை உருகுவதைப் பற்றியது. Earth: One Amazing Day இனை…

Earth: One Amazing Day – 01

முன்குறிப்பு    வரலாறு எனப்படுவதும் கதைகள் எனப்படுபவையும் எங்கிருந்தோ  தான்தோன்றித்தனமாக தோன்றியவை அல்ல. உலகில் எங்கோ, யாரோ ஒருத்தர் ஒவ்வொரு நொடியும் புனைந்துகொண்டிருப்பவை. கதை 01 எங்கள் அம்மம்மாவின் ஊர் கொந்தக்காரன்குளம். அதனை அடுத்து வண்ணாங்குளம். ஒரு வருடத்திற்கு முதல் கொந்தக்காரன்குளம் போயிருந்த போது வண்ணாங்குளத்திற்கும் தனியாகச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பொற்கோவில் இருக்கின்றது. செருப்பை வாகனத்தின் அருகில்…

Stephen Hawking – அஞ்சலி

Stephen Hawking தனது 76 ஆவது வயதில் காலமாகிவிட்டார்.  “காலமாகுதல்” என்ற வினைப்பிரயோகம் Stephen Hawkingஐப்  பொறுத்தவரையில் மிகவும் பொருத்தமானதொன்று.   சிறுவயதில் அப்பாவைப் போலவும் எனக்குப் படிப்பித்த ஆசிரியர்கள் போலவும் விசித்திரமாகத் தெரிகின்ற மனிதர்கள் போலவும் ஒருமுறையாவது நடித்துப் பார்த்திருப்பேன். முன்னர் இயற்கையாக நடந்த இந்தச் சம்பவங்கள் பின்னர் Dubmash என்ற செயலி மூலம் பிரபலமாக்கப்பட்டது.  எப்போதாவது அகண்ட…

"ஒழுங்குபடுத்தலின் வன்முறை" – உரையாடல்களின் அவசியம்

ஆறாவது புதிய சொல்லில் அருண்மொழிவர்மன் எழுதிய “ஒழுங்குபடுத்தலின் வன்முறை” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, ஏழாவது புதிய சொல்லில் எனது கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சமகால சூழ்நிலைகளில் ஒழுங்குபடுத்தலின் வன்முறை பற்றிய உரையாடல்கள் அவசியப்படுகின்றன. பொதுஜனங்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் பரவலாக்கப்படவேண்டும். எட்டாவது புதிய சொல் வருகை தந்த நிலையிலும் பொதுவெளி உரையாடல்கள் எதுவும் இடம்பெறாமை வருத்தமளிக்கிறது. அருண்மொழிவர்மனின்…

Back to top