Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: January 2018

நகரத்தின் குறிப்புகள் – 05

மொறட்டுவையில் கட்டுபெத்தை சந்தி மிகவும் முக்கியமானதொன்று. கொழும்பிலிருந்து காலிக்கான அகன்ற வீதியிலிருந்து கொட்டவைக்குச்  செல்ல பிரிகின்ற இடம் தான் கட்டுபெத்தை சந்தி. ஏழு சமாந்தர வீதிகள். நிறைய நிற விளக்குகள். எப்போதும் சன நடமாட்டம் மிகுதியாகவே இருக்கும். தோள்களில் பைகளைப் போட்டுக்கொண்டு கைகளில் தொலைபேசியுடன் நடக்கின்ற கம்பஸ் மாணவர்களால் எப்போதுமே கட்டுபெத்தை சந்தி ஆரவாரமாகத் தெரியும். கட்டுபெத்தை சந்தியிலிருந்து…

The End Tour – Black Sabbath – 02

தொடர்ந்து Black Sabbath இன் பாடல்களைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். மூன்று நாட்களாக நேரமிருக்கின்ற போதெல்லாம் கணனியிலும் கைத்தொலைபேசியிலும் Black Sabbath இன் பாடல்கள் தான். கூடவே அவர்களின் இறுதிப் பயணமான The End Tour இல் பாடிய பாடல்கள் அனைத்தினதும் காணொளிகளையும் பார்த்துக்கொண்டுவருகிறேன். கடவுள் பூமிக்கு இறங்கி வந்தால் மக்களின் ஆரவாரமும் ஆர்பரிப்பும் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது…

War Pigs – Black Sabbath

Heavy metal music இசை வகையின் முன்னோடிகள் என்றழைக்கப்படும் இங்கிலாந்தின் ராக் இசைக்குழுமம் ஒன்றின் படைப்பு War Pigs. இது அவர்களின் இரண்டாவது இசைத் தொகுப்பில் வெளியாகிய பாடல். அவர்களின் முதலாவது இசைத்தொகுப்பு 1970 இல் வெளியாகிய Black Sabbath. பின்னாளில் அவர்கள் Black Sabbath குழுவினர் என்றே அழைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அதே வருடத்தில்…

இணைய வாசிப்பில் முரகாமி

இன்று ஹாருகி முரகாமியின் பிறந்த தினம். முதன் முதலில் ஹாருகி முரகாமியை அறிமுகப்படுத்தியவர் ஜி. குப்புசாமி அவர்கள். தோற்றத்தில் மென்மையானவராகத் தெரிபவரான முரகாமியின் எழுத்துக்களும் மென்மையானவை. உலக இலக்கியப் பரப்பில் எந்த விதத்திலும் நிராகரித்துக் கடந்தவிடக்கூடியவர் அல்ல. வெகுசீக்கிரம் அவரைப் பேசலாம். அவரின் நாவல்கள், சிறுகதைகள் என்று எதையும் பற்றிப் பேசாமல் இப்போது அவரின் இணைதளத்தைப்…

கொழுக்கட்டைத் திருவிழா

எனக்கு உருவாகின்ற கனவுகளைப் பற்றி ஏற்கனவே ஒரு தடவை எழுதியுள்ளேன். ” கனவும் சமூகமும் ” என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பதிவில் – ஒரே மாதிரியான கனவுகள் பல தடவைகள் வருவதைப் பற்றிக் கூறியிருக்கிறேன். கனவுகளைப் பற்றி நிறைய கேட்டும் வாசித்தும் அறிந்திருக்கிறேன். எல்லோருக்கும் போல விதம் விதமான கனவுகள் எனக்கு ஏற்படுவதில்லை. குறிப்பிடத்தக்க…

நகரத்தின் குறிப்புகள் – 04

நகரத்தின் குறிப்புகள் நான்கினை எழுதுவதற்காக எடுக்கப்பட்ட குறிப்புகளைத் தொகுத்துள்ளேன். இந்தக் குறிப்புகளை நான் பேரூந்தில் பயணிக்கும் போதும் பேரூந்திற்க்காகக் காத்திருக்கும் போதும் மேலும் வேறு சில இடங்களிலுமிருந்து எடுத்திருக்கிறேன். ஒழுங்கமைக்கப்படாத குறிப்புகளை தொகுப்பது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் எல்லாத் தனிமனிதர்களிடமும் குறிப்புகள் நிறையக் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரினதும் தினசரி வாழ்க்கையே மிகவும் நல்ல குறிப்புக்கள். புதிதாக…

ஜனவரி ஒன்றிற்கான கனவு!

எனக்குப்  புதுவருடம் ஒன்றைப்பற்றிய கனவொன்று உள்ளது. இதுவரையில் ஜனவரி ஒன்றைப்  புதுவருடமாகக் கொண்டாடியதில்லை.எனது எண்ண அடுக்குகளில் ஜனவரி ஒன்றிற்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை. சரியான முறையில் வெடி கொளுத்தத் தெரியாது என்ற காரணத்தினால் ஒழுங்கை நெடுக வெடி கொளுத்திய அனுபவமும் இல்லை. வில்லியம் ஜோசப்பின் Nothing Else Matters என்கிற அற்புதமான இசையினைக் கேட்டுக்கொண்டே எனது…

Back to top