Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: December 2017

நன்பெரியல் குறிப்புகள்  01 – 08

01. முதல் நாளுக்கு முன்னைய நாட்கள் சில கிழமைகளுக்கு முன்னர் காலியில் உள்ள ருமசலவிற்கு சென்றிருந்தேன். காடுகள் மலைகளின் நடுவே அமைந்த அழகிய கடற்கரை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் உப்புத்தண்ணீரில் ஊறினேன். அதிகளவான கூட்டம் இல்லாத கடற்கரை. அதே நாளில் தான் கொழும்பு உட்பட மேற்குப் பக்கம் தாழ் அமுக்கமும் கடும் மழையுமாக இருந்தது. இது…

என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/   82 Views

போ – ஹியூகோ – நான் மற்றும் கடவுள்

கடவுளின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் இரும்பு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி நான் வீதிக்கரை ஓரமாக தேய்ந்து தேய்ந்து ஊர்கிறேன். கடவுள் டீக்கடையில் நிற்பதாக எனக்கு முன்னால் இன்னொரு இரும்பு மூட்டையுடன் ஊர்ந்துகொண்டிருக்கும் ஆலன் போ சொன்னார். எனக்குப் பின்னால் ஊர்ந்து கொண்டிருந்த விக்டர் ஹியூகோவிற்கும் அதையே சொன்னேன். ஆலன் போ ஒரு சந்தி முடக்கில் இயலாமல்…

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள் உங்கள் கூக்குரல்களால் எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ” – எஸ். போஸ் ” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ” – காசுவோ இஷிகுரோ உன்னதம் இதழில் வெளிவந்த…

நகரத்தின் குறிப்புகள் –  03

நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். முன்னால் கூனியபடி தலைக்கு முக்காடு மாதிரி ஒன்றால் மூடி சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். பயணங்களின் போது…

Back to top