Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: September 2017

சுடர்.

கடிதத்தை நீட்டிய போது அவன் வியப்படையவில்லை. காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து விட்டு வழமையான தனது கறுப்பும் சாம்பலும் கலந்த சீருடையை கொடியிலிருந்து எடுத்து இஸ்திரி போடும் பெட்டி உள்ள மேசைக்கு அருகில் நீளமாக இருந்த வரிசையில் அமர்ந்தான். சுற்றியிருந்த எல்லாருமே ஒவ்வொரு கையடக்க தொலைபேசிகளை வைத்து நோண்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் முகங்களும்  தொலைபேசி வெளிச்சத்தில்…

கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 02

தமிழ் அரங்குகளில் இருந்த புத்தக பல்வகைமை பற்றி பேசியே ஆகவேண்டும். புத்தக தேர்வு என்பது இன்றைய இலங்கை தமிழ் சமூகத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. கொழும்பு போன்ற அவசர நகரங்களில் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறைக்குள் இலக்கிய வாசிப்பு என்பதை எதிர்பார்க்க முடியாத ஒன்று. அவர்களுக்கு கிடைக்கின்ற ஓரளவு நேரங்களில் மனதை சந்தோசப்படுத்தக் கூடிய சில நாவல்களை…

பாதி வெளிச்சம்.

பாதி வெளிச்சம் உள்ள ஒரு அறையினைத் திறந்து நீண்ட நேரம் காத்திருக்கிறேன், செக்கு நாற்றம் வீசும் மேனியின் மேல் செம்மஞ்சள் காவி ஒன்றை சுற்றியபடி : சுற்றல் , அலைதல் , தோண்டுதல் , பிரித்தல் , கிழித்தல். இந்த நாற்றம் வீசும் கந்தல் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தான் என்னை செதுக்கியது, மன்னிக்கவும் –…

முதலாவது பிறந்ததினம் – அசோகமித்திரன்

இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளி அரோகமித்ரனின் பிறந்த நாள். அவரின் இறப்பின் பின்னரான முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே இது அவரின் முதல்ப்பிறந்த நாளாக கொண்டாடுவதில் பிழைகள் எதுவும் இல்லை. அசோகமித்திரன் பற்றிய எனது பார்வையை  இரண்டு காலகட்டமாகப் பார்க்கிறேன். இது வாசிப்பு அனுபவத்தின் படிநிலை வளர்ச்சி/ வீழ்ச்சியின் பொருட்டு நடந்திருக்கலாம். அசோகமித்திரனின்…

கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 01

சினிமா அரங்குகளிலும் திருவிழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் மட்டுமே இவ்வளவு மக்கள் கூட்டத்தை கண்டிருக்கிறேன். இந்திய புத்தகக்கண்காட்சிகளில்  புத்தக அரங்குகளில் விநியோகஸ்தர்கள் ஈக்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள் என்று பரவலாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இது உண்மையாக இருந்தால் இப்படி நியாயப்படுத்தலாம் – இந்தியாவின் தமிழ் நாட்டில் புத்தக கண்காட்சிகள் அதிகம் நடைபெறும், அதனால் அதிக…

திருவிழா – தளமாற்றம் 

*இலங்கை சட்டக்கல்லூரியில் சட்ட மாணவர் இந்துமகா சபையின் வருடாந்த இதழான நக்கீரம் 2017இல்    வெளிவந்தது. சிலருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் போது தற்கொலைக்கு முயற்சி செய்வதுண்டு. கண் திருஷ்டியை கழிப்பதற்கு நாற்சந்தியில் சமய அனுட்டனங்களைச் செய்து எரிப்பர். மனதில் நீண்ட சோகம் பரவும் போது வீட்டின் சுவர்களில் ஒட்டப்பட்ட அழகிய ஓவியங்களும் சிற்பங்களும்…

கனவும் சமூகமும்

சமூகத் தொடர்புகள் பற்றி என்னுடன் உரையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது. மற்றவர்களோடு உரையாடுதல், அவர்களின் கருத்துக்களை செவிமடுத்தல், அவர்களோடு வேலைகளில் ஈடுபடுதல் , அவர்களோடு சந்தோசமாகவும் உற்சாகமாகவும் நேரத்தை கழித்தல் என்ற பல வேறுபட்ட விடயங்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் என்னைத் திருத்தி இந்த சமூகத்தில் வினைத் திறன் மிக்க மனிதனாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர்….

இசை – Rohingya – அனிதா

(1) நேற்று புகையிரதப் பெட்டிக்குள் வியர்த்து விறுவிறுக்க ஏறி, தோளில் இருந்த பயணப்பையை மேலே வைத்துவிட்டு ; காலையிலிருந்து உடுத்தியிருந்த மேற்சட்டையையும் பெனியனையும் கழற்றி புதிய மேற்சட்டை ஒன்றை வேகமாக மாற்றினேன். அந்த பேட்டியில் பெரிதாக எவருமே இல்லை என்பதால் எனக்கு மாற்றுவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. சப்பாத்தைக் கழற்றி வைத்துவிட்டு, துணி ஒன்றினால் வியர்வையை…

Back to top