Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: July 2017

“ நான் வாசித்த நாவல்கள் “ – எஸ்.ரா – சிறுகுறிப்பு

எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய மிகவும் முக்கியமான பல இலக்கிய உரைகள் இருக்கின்றன. எஸ்.ரா ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி முக்கியமான பேச்சாளரும் கூட. அவர் ஆற்றிய உலக இலக்கியங்கள் தொடர்பான உரைகள் பிரசித்திபெற்றவை. கிரேக்க நாடகங்களை பற்றி கிரேக்க நாடக புத்தக விழா ஒன்றில் பேசியபோது, அவரின் பரந்த அறிவை வியந்திருக்கிறேன். அப்படியான சிறந்த உரையொன்றை சமீபத்தில்…

உலக இலக்கியத் தொடர் 3 – கரமசோவ் சகோதரர்கள் – THE BROTHERS KARAMAZOV-அறிதலும் புரிதலும்.

எமது இலக்கியங்களுக்கும் ருச்சியன் இலக்கியங்களும் மிக நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. உண்மையில் எமது இலக்கியங்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ருச்சியர்களின் மொழி கலாசாரம் பண்பாடு வாழ்க்கை முறைகள் எல்லாம் வேறு வேறானவை. அவர்களின் பௌதீக அமைவிடம் சுற்றுச் சூழல் என்று அனைத்துமே வித்தியாசமானவை. இருந்தும் ருச்சியர்களின் இலக்கியம்…

பேரூந்து – மெடூசா – குறியீடு

(01) காலையில் அந்தரப்பட்டு என்னைத் தயார் செய்து கொண்டு அப்பாவுடன் பேரூந்து நிலையத்திற்கு யாழ்பாணம் போவதற்காக சென்றேன். பேரூந்து நிலையம் போவதற்கு முதலே பேரூந்தை இடையில் மறித்து ஏறிக்கொண்டேன். ஏறும் கணமே நடத்துனரும் பேரூந்து படியில் நின்றவரும் ஏதோ பேசிக்கொண்டனர். நான் அதைப் பொருட்படுத்திகொள்ளாமல் என் பாட்டில் ஏறினேன். படியில் நின்ற இருபத்தைந்து மதிக்கத்தக்கவர் என்னை…

புதிய சொல். – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்.

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது இதழ் இந்தவருடம் ஜூலை மாதம் வெளிவந்திருக்கின்றது. இந்த இதழ் ஏப்ரல் – ஜூலை காலாண்டிதழ்.   சமகால இலக்கிய சூழல் என்கிற வரையறைக்குள் இருக்கின்ற சமூகத்தின் இயக்கம்…

பெண்ணியம் – கருத்து நிலை விளக்கம்.

சமூகத்தின் கட்டமைப்பில் இருக்கின்ற அடிப்படை அத்துமீறல்கள் காரணமாக ஏற்படுகின்ற கருத்துருவாக்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செறிந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கருத்துருவாக்கங்கள் அக்கால கட்டத்தின் சமூக நிலைமையையும் மக்களின் எண்ணப் பரவலாக்கத்தையும் காட்டும். ஒரு வலிமையான கருத்து எழுந்த போது ஆதரவுகளும் வளர்ச்சியும் பரவலாக்கமும் மாறுதல்களும் எதிர்ப்பும் மிகச் சாதாரணமாக எழுந்துவிடுகின்றன. சில கருத்தியல்கள் காலம் காலமாக…

அறையைப் பற்றி எழுதுதல்.

எல்லோரும் அவர்களின் அறையைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்? நான் காணாத எவற்றையெல்லாம் அது வைத்திருக்கிறது? ஒரு நாளில் சராசரியாக பத்து மணித்தியாலங்கள் அதற்குள் தூங்குகிறேன் ; இரண்டு மணித்தியாலங்கள் அதற்குள் தூங்குவது போன்று புரள்கின்றேன். அத்தனை நேர சொப்பனத்திலும் காணாத ஒன்றை, மிகுதி நேர விழிப்பிலும் காணாத ஒன்றை, அப்படி…

வாசிப்பும் பகிர்வும்.

நமது வாசிப்பு அனுபவத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாசிப்பு வேட்கை இருக்கும். நாம் நாளாந்தம் நெருக்கமான உணர்வுகளைச் சீண்டிவிடுகின்ற வாசிப்பியையும் கடந்துபோகின்றோம். வாசித்தவுடன் தொடர்பற்றுப்போகின்ற வாசிப்பையும் கடந்து தான் போகின்றோம். இதை எந்நிலை வாசிப்பு அனுபவம் கொண்டவராலும் தவிர்க்கமுடியாது. நாம் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்றாலும் அதில் பல அணுக்கமாகவும் அதே அளவு பல அந்நியமாகவும் இருந்துவிடுகின்றன….

Back to top