Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: June 2017

ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக  உத்தேசித்திருக்கிறேன்.

ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன். 1.சம்பவம். நான் இருட்டின் வெளிச்சத்தில் உறங்கிக்கொண்டிருந்தேன். அது ஒரு முழுப் பௌர்ணமி நிலவு. என் படுக்கை அறையின் கதவு ஓரத்திலிருந்து நிலத்தாலும் சுவராலும் எறும்புகள் என் கட்டிலுக்கு படையெடுத்தன. ஜன்னல் ஊட்டாலும் பூக்கற்களின் ஓட்டைகளாலும் கதவு திறப்பிடும் துளைகளாலும் ஈக்களும் பூச்சிகளும் முட்டி மோதிக்கொண்டு மொய்த்தன. கட்டிலின் மேலே…

உலக இலக்கிய தொடர் – பாகம் 2 தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் – முற்குறிப்பு.

முன்னைய கட்டுரையில் டால்ஸ்டாயின் அன்னே கரீனினா பற்றிய அறிமுகத்தை எழுதியிருந்தேன். டால்ஸ்டாய் மனிதத்தின் வெளிச்சத்தின் பகுதிகளை புனைகிறார் என்றால் தஸ்தாயெவ்ஸ்கி மனிதத்தின் இருண்மையை புனைகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துலகம் வித்தியாசமானது. அதுவரை – இன்னமும் யாராலும் கொண்டுசென்று காட்டமுடியாத ஒரு உலகு. ஒரு ஆழ்ந்த இருண்மையான அதல பாதாளத்தில் கைகளில் விளக்குடன் எம்மை கூட்டிச் செல்கிறார். அவருக்கு…

தற்கொலையும் டீச்சரம்மாவும். – அசோகமித்திரனின் தண்ணீர்.

  தண்ணீர் நாவலின் பதினெட்டாவது அத்தியாயம் நாவலிற்கும் சரி வாசகனிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். தற்கொலைக்கு முயற்சி செய்த யமுனாவை அந்தத் தெரு ஆசிரியை ஒருத்தி ஆற்றுப்படுத்துவதாய் அந்த அத்தியாயம் நகரும். யமுனா வாழ்கையின் சிக்கற் தன்மையை எதிர்கொள்ளமுடியாது உழன்று போய் தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவளின் வீட்டு முதலாளி அம்மா அதைத் தடுத்து…

கலகக் குரலின் ஆன்மீகம். – குற்றம் கடிதல்.

கலகக் குரலின் ஆன்மிகம் என்ற தலைப்பில் கத்தார் பற்றிய குறிப்புக்களோடு இரா. திருநாவுக்கரசு காலச்சுவடு மே 2017 இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதில் கோவிலுக்கு செல்வதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதும் மத சார்பின்மை என்றவாறு கட்டுரையை நகர்த்தியிருப்பார். இது எவ்வளவு சதவீதம் உண்மை?   கடவுள் என்ற சக்தியின் திணிப்பு பிறந்தது முதலே எமக்குள்…

பித்தன் 01 – அறிமுகமும் அம்பலமும். – அப்துல் ரகுமான்.

மீண்டும் ஒரு முறை பித்தன் கவிதை தொகுப்பை வாசித்துப் பார்த்தேன். 26.11.2016 அன்று நடந்த தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் நிகழ்வில் பித்தன் கவிதை தொகுதிக்கு அறிமுக அனுபவ பகிர்வு ஒன்றைச் செய்திருந்தேன். ஆனால் பதிவு செய்து இருக்கவில்லை. அதன் குறிப்புக்களும் என்னிடம் இப்போது இல்லை. பித்தன் தொடர்பாக விரிவாக எழுதவேண்டும் என்று ஆசையிருந்தது….

“கூனல்” – தெளிவத்தை ஜோசப் – மௌனிக்கும் குரல்கள்.

என்னதான் நாங்கள் சமத்துவமும் சமஉரிமையும் பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் திரிந்தாலும் நம் கண்முன்னே இன்னும் காலா காலமாக உரிமைகளை சரிவரப் பெறமுடியாத  மலையக சமூகத்தின் ஆதங்கங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவே இல்லை. தொழிலாளர் வர்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவந்து இன்று வரை தொழிலாளர் வர்க்கமாகவே வாழ்ந்து விட்டு செல்லும் துர்பாக்கிய நிலையில் மலையக மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். தினக்கூலிக்கும்…

மாண்ட்டோ படைப்புகள்.- சிறுகதை 1 – “காலித்” – ஊடறுக்கும் மனப்பிறழ்வுகள்.

எங்கள் எல்லோரிடமும் அழிக்கமுடியாத, அதே நேரத்தில் காரணமும் தெரியாத ஒரு வழக்கம் இருந்துகொண்டு வருகின்றது. ஒரு நேரத்தில் அதிகம் சிரித்தால் அடுத்து அதே அளவு அழவேண்டிவரும். அதற்காக எமது மகிழ்ச்சியான தருணங்களை வலுக்கட்டாயமாக குறைத்துக்  கொண்டாடுவோம். இது சிறியவர்களில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பின்பற்றப்பட்டு வருகின்றது. பௌதீக ரீதியில் சமானன எதிர் வினை எதற்கும்…

அஞ்ஞாதம். – சிறுகதை.

கண்கள் தான் அவளின் முகம். மேகலா என் சிறுவயது முதலே நல்ல நண்பி. அன்றிலிருந்து இன்று வரை எது வாங்கினாலும் பகிர்ந்துகொள்ளும் மனப்பக்குவம் எங்களிடம் இருந்தது. ஊர்த் தேர் திருவிழாவில் நான் வாங்கிக் கொடுத்த தஞ்ஞாவூர் பொம்மையை இன்றும் தான் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லிக்கொள்வாள். இரட்டை குடும்பி போட்டு ஒன்று முன்னே மற்றது பின்னே கழுதைக்…

உலக இலக்கிய தொடர். பாகம் 01- டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.

அறிமுகம். நமது வாழ்கையில் இரண்டு வகையான தொழிற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று புறச்செயற்பாடு மற்றையது அகச்செயற்பாடு. இன்றைய சமூகத்தின் போக்கை ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை செயற்படுத்திக்கொள்ள புறச்செயற்பாடுகள்தான் காரணம். புறத்தே நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தனிமனித வாழ்வியலையும் பாதிக்கின்றது. எங்கோ நடக்கின்ற திருவிழாவும்…

குட்டை குடிநீர் – 03

தமிழ் இலக்கிய சூழலில் இன்று நின்று நிதானித்து வாசித்து கடக்கின்ற போக்கு அருகிப்போய் விட்டது. இதை எந்த கட்ட வாசிப்பு அல்லது இலக்கிய நிலை என்று கூறுவது சிரமம். ஒரு வகையில் வாசகனின் நேர முகாமைத்துவம் நேரடியான தாக்கத்தை செலுத்தினாலும் வாசகன் செலவு செய்கின்ற வீண் பொழுதுகளை கணக்கிடும் போது நேர சிக்கல் என்பது பொருட்டல்ல…

Back to top