Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: May 2017

ஒரு படைப்பாளியும் மூன்று மனநிலையும். – சுந்தர ராமசாமியின் பிறந்த நாள் நினைவு.

அன்று தமிழ் மாருதம் விமர்சையாக நடந்துகொண்டிருந்தது. இலக்கிய நிகழ்வுகளோடு மண்டபத்தின் அருகில் இருந்த நீண்ட திறந்த வெளியில் பூபாலசிங்கம் புத்தக நிலைய புத்தக விற்பனை மையமும் போடப்பட்டிருந்தது. வரிசைக்கு நான்கு ஐந்து மேசைகள் வைத்து புத்தகங்களை பரவி விட்டிருந்தார்கள். நிகழ்வுகளை கவனிக்கும் அதே வேளை பார்வையாளர்களையும் கவனிக்கவேண்டி இருந்ததால் இரண்டு மூன்று கட்டமாக புத்தகங்களை கொள்வனவு…

களைகள்.

மிகச் சமீப காலமாக எம்மிடையே பரவிக்கொண்டிருகின்ற  இரண்டு வற்றாத நோய்கள் பற்றி எனது தனிப்பட்ட பார்வை என்பதால் இதிலுள்ள கருத்தியல் மிக மட்டமாகவும் கீழ்த்தனமானதாகவும் இருக்கலாம். இதை பற்றி விவாதித்து கொள்ள தேவையில்லை.   இலங்கைத் தமிழர் இடையே காலம் காலமாக இருந்துகொண்டிருந்த செந்தீ சமீபத்தில் கீழ் பக்கங்களில் திரண்ட வெள்ளத்தால் அணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எத்தனையோ…

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 08 – நாட்டார் கதைகள் II

மனித நாகரிக வளர்ச்சியுடன் கூடவே வளர்ந்து வந்த முக்கிய கூறு மனிதப் பண்புகள். மனித நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதப் பண்புக உருவாகி வளர்ச்சியடைந்து முதிர்ந்து போய் செப்பனான முறையில் வரையறுக்கப்பட்டு இன்று வெளிவந்து விட்டன. சொல்லளவில் மிக முதிர்ச்சியான மனிதப்பண்புகள் இன்று எல்லா சமூகங்களிலும் ஊடுருவியிருகின்றன. எம் சமூகத்தில் இன்றிருக்கின்ற எல்லா மதத்தினருக்கும்…

நிதர்சனம். அன்டன் செக்காவின் வலிமையான மனப்பதிவுகள்

தி இந்துவின் 2016ஆம் ஆண்டின் தீபாவாளி சிறப்புமலரில் பிரசுரமாகியிருந்த அன்டன் செக்காவ் இன் வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எனக்கு சில நிதர்சன உண்மைகளை வெளிக்காட்டியது. வழமையான செக்காவின் சிறுகதைகள் போலவே நுண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஒரு படைப்பு தான் வலிமையான மனப்பதிவுகள்.   எங்கள் எல்லோரிடமும் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. யாரும் அறவே…

தேவை.

எனது மிக நெருங்கிய உறவினர் இறந்து விட்டார் ஏதோ கண்காணாத தேசத்தில்,   அவருக்கென ஒரு சவப்பெட்டி ஆறடியில்.   நானும் அந்த மலர்ச்சாலைக்கு போயிருந்தேன்.   விதம் விதமாக ஒவ்வொரு விலையில் பல மரங்களின் அர்ப்பணிப்பில்.   ஒரு பூ மட்டும் இரண்டு கதவுகளில் இரண்டு பூக்கள் இரண்டு கதவிலும் ஒரு பூச்செண்டு அதனுடன்…

தமிழ் சமூகமும் தமிழ் திரைப்படங்களும் – 01

இன்றைய தமிழ் சூழலின் வடிவமைப்பில் திரைப்படங்களின் வீச்சு மிக கூர்மையானது. இன்றைய பண்பாட்டு பரவலாக்கம் காரணமாக ஒரு சமூகத்தின் அனைத்து கூறுகளும் எல்லா சமூகத்தினரும் அவதானிக்க கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இந்த அவதானங்களின் மையப்பொருளாக, ஒரு சமூகத்தின் அடையாளாமாக எடுத்தாளப்படுகின்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் அசாத்தியமானது. எந்த சமூக ஊடகமும்…

அணுக்கம்.

நீங்கள் கவிதையினை எப்படி அணுகுவீர்கள்?   எந்த வசனத்திலிருந்து அல்லது எந்த எழுத்திலிருந்து அப்படியும் இல்லையா அப்போது எந்த புள்ளியிலிருந்து ஆரம்பிப்பீர்கள்?   யாராவது தொட்டு காட்டுவார்களா ? இல்லை அவர்களே வாசிப்பார்களா ?   காலையிலா ? மாலையிலா ? நடு நிசியிலா ? அல்லது தூக்கத்தை இடையிலே கலைத்து விட்டு அரை நித்திரையிலா…

(01) எழுத்தாளன் என்ற தொழிலின் புரவுருவயமான விளக்கம் இலக்கியத்தையும் மக்களின் தேவைகளையும் எழுதுவது என இன்றைய சூழலில் கருத்து நிலவுகிறது. ஒரு வகையில் அது மறுக்கமுடியாத உண்மை.எழுத்தாளன் என்பவன் அதனாலேயே அடையாளப்படுத்தபடுகிறான். இந்த இலக்கியங்களையும் மக்கள் தேவைகளையும் எழுதுகின்ற சமூகப்பணியில் எழுத்தாளன் தனக்கென அடைகின்ற ஆத்ம திருப்தி அவனின் வீச்சு எல்லையை அவன் நிர்ணயிப்பதில் தான்…

உருவாக்கம்.

மனநோயாளியிடம் கதைத்துக் கொண்டிருந்த வைத்தியர், தன்னறைக்குள் சென்று தலையை சோறிந்து கொண்டார். மனநோயாளிகள் பிறப்பதில்லை ; உருவாக்கப்படுகிறார்கள். 87 Views

சுஜாதா – அவரின் வாசகர்கள் , வாதம் ௦1

வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.   எனது சுஜாதா – அவரின் வாசகர்கள் என்ற பதிவு தொடர்பாக எழுந்த கருத்து பகிர்வுகள். https://brinthansite.wordpress.com/2017/05/03/சுஜாதா-அவரின்-வாசகர்கள-2/ இந்த பதிவின் பின்னர் மதன் குமார்  :-  சுஜாதா வெகுஜன எழுத்தாளர் என்ற புள்ளியிலிருந்து அவ்வப்போது விலகி தீவிர இலக்கியப் பக்கமும் தலைகாட்டிப் போயிருக்கிறார்….

Back to top