Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: April 2017

ரிஷி வனம். – சிறுகதை ( திருத்தப்பட்டது )

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்படியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலையை முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன்….

ஜெயகாந்தன்- அருண்மொழி வர்மன்

சில விமர்சனங்கள் எனது மனதிற்கு மிக அண்மித்ததாக இருக்கும்.  விமர்சனத்தின் முழு உள்ளடக்கத்தை விளங்கும் அளவு அறிவும் அனுபவமும் இல்லை என்றாலும் , விமர்சனத்தில் வருகின்ற சில குறிப்புக்கள் எனது மன எண்ணங்களாகவும் இருக்கும். ஜெயகாந்தன் பற்றி முதன்முதலில் அறிந்த விதம் ஒரு கசப்பான அனுபவ பகிரவாகவே இருந்தது. அது தான் என்னை வாசிக்கவும் தூண்டியது….

தமிழ் சிறுகதை முன்னோடிக்கு வாழ்த்துக்கள்.

இன்று எல்லோருமே சிறுகதை உலகத்திற்குள் நுழைந்து விட்டார்கள். எல்லோருமே சிறுகதைகளை எழுதவும் விமர்சிக்கவும் தொடங்கியிருகிறார்கள். சிறுகதைகள்  ஏதோ ஒரு வகையில் அனைவரையும் சென்றடைந்து விட்டது.  இதனால் சிறுகதைகள் சந்தையில் மலிந்து போய் விட்டது. தரமாக வருகின்ற சிலதும் கஞ்சலுடனே இல்லாமல் போகின்றன. இப்படியான துர்ப்பாக்கிய நிலை இன்றைய சிறுகதைகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதேபோல எப்போதும் ஊதுகின்ற…

எயிறு. – சிறுகதை

“அவன் கதவை தாழிட்டு கொண்டான்.” , என அந்த கதை முடிந்திருந்தது. நான் அதன் கடைசி முற்று புள்ளியை வெறித்துபார்த்துகொண்டு சில மணிநேரம் இருந்தேன். அந்த முற்றுபுள்ளியை தாண்டி அங்கால் ஏதும் எழுதப்பட்டிருக்க கூடாதா என்று மனதின் ஆழத்தில் பெரும் ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த சில மணி நேரங்களில் முற்றுப்புள்ளிக்கு அடுத்த வெற்றிடத்தில் சில…

எளிமை சொல்லும் அனுபவங்கள் – அகளங்கன்

சொந்த வட்டார வழக்கில் ஒரு கதையை வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒன்றிப்பு ஆலாதியானது. அத்தோடு கதைக்களமும் சம்பவங்களும் கண்களின் முன்னே இருக்கும் போது கதைசொல்லி ஒரு வீதியினூடாக கதைமாந்தர்களை அழைத்துச் சென்றால் வாசகனின் மனம் அதன் கிளைவீதிகளை எல்லாம் நினைவுபடுத்திக்கொள்ளும். இது வீதிகளைப் போலவே சம்பவங்களுக்கும் பொருந்தும். ஒரு சில சம்பவங்களில் நாம் முதலாம் நிலையிலும்…

அசோகமித்திரன் – குறிப்புணர்தல் – தண்ணீர்.

சமகால எழுத்து வட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளில் இருந்து இலக்கியத்தை விரித்து எடுத்தல் என்ற செயற்பாடு சொற்பமாகவே நடைபெறுகின்றது. ஒரு இலக்கியத்தின் அடைவு மட்டம் எதைக்கொண்டு நிர்ணயிக்கபடுகின்றது என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. நான் இலக்கிய அடைவு மட்டம் என்பது எம் முன்னோடிகளின் படைப்புகளை எமது படைப்புக்கள் தாண்டும் போது ஏற்படுகின்றது என்பேன். தாண்டிய பின்னர் அதை…

நீள்வட்ட இறப்பு.

எப்போதாவது நீங்கள் இறந்திருகிறீர்களா? ஒரு முறையாவது ? மெல்லிய மழைத்துளி கருங்கல்லில் பட்டுத் தெறிப்பதைப் போல சிதறியிருகிறீர்களா ? ஆழமான கடலின் அடியில் யாரையாவது சந்திக்கபோகும் போது, சில வேளைகளில் சந்தித்த பிறகு எப்போதாவது இறந்திருகிறீர்களா? இறந்திருப்பீர்கள் தெரியாமலே. அவர்களின் கை குலுக்கல்கள் புன்சிரிப்பு நட்பான பார்வை இதில் எதாவது உங்களை கவர்ந்திருக்கலாம். உங்கள் தூக்கத்தை…

வழமை போல இலக்கியங்களுக்குள் ஒருவனாய் நின்று ஆராயாமல் ஒரு பார்வையாளனாக வடக்கு பிரதேசங்களில் உலவுகின்ற நாட்டுப்புற கதைகள் சம்பந்தமான இந்த கட்டுரையினை எழுதலாம் என்ற நோக்கம் தான் இந்த காலதாமதத்துக்கு ஒரு காரணம். எப்போதும்போல இலக்கிய வர்ணனைகளுடன் ஆராய்வதற்கு கதைகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதனால், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஆராய்தல் மிக பொருத்தமானதாக இருக்கும். இந்த…

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி…

“வினோத நூலகம்” – சிறுகுறிப்பு

எந்த சிறுகதையை நான் வாசித்தபோதும் “வினோத நூலகம்” என்ற சிறுகதையை வாசித்ததில் கிடைத்த அனுபவம் அவை எதிலும் கிடைத்ததில்லை. ஜி. குப்புசாமி மொழி பெயர்ப்பில் கல்குதிரையின் கார்கால இதழ் ஆவணி புரட்டாசி 2016 இல் வெளிவந்த ஹாருகி முராகாமி இன் சிறுகதை தான் வினோத நூலகம். கதைக்கு விமர்சனம் என்றெல்லாம் எழுதமுடியாதஅளவு என்னுள் தாக்கம் செலுத்துகிறது…

Back to top