Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Month: February 2017

”-COOK”

இருட்டு இன்னும் ஆழப்படுத்தி கொண்டிருந்து. லைட்டர் வெளிச்சங்கள் மட்டும். ஐந்தாறு சூரியன்கள் இருப்பதுபோல். எம்மில் எத்தனை பெயர் என்று சரியாக தெரியவில்லை. என்னோடு காலையில் அண்ணளவாக அறுபது பேர் வேலை செய்வார்கள். யாரும் என் இனத்தவன் இல்லை. மங்கோலியர்களும், நீக்கிரோக்களும் , அடிமட்ட அமெரிக்கர்களும் தான். என் கசினோ பழக்கம் என்னை இந்த கேவலமான தொழிலுக்கு…

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 -மணல் வாசம்

மணல், காற்றில் கலந்து வீசும் கரையோரங்களை தாண்டி தெரியும் அந்த குறுங்குடில்தான் அந்த மீனவனின் இல்லம். செங்கற்களால் அடுக்கியும் மண்ணால் அப்பியும் சீரின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த குடில். மீனவனும் அவன் மனைவியும் மட்டும்தான். ஊரார் கூடி கிராம நடுவில் உள்ள அந்தோனியார் கோயிலில் அவர்களுக்கு ஒரு மாதம் முன்தான் திருமணம் நிறைவேறியது. மன்னார் மாவட்ட கிராமங்களில்…

வாசனை

தனி மனித வாசனை எதில் எல்லாம் தென்படும் என்று என்னிடம் நானே கேட்டுக்கொள்வதுண்டு. ஒரு சில ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்களை மனமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு. நாம் எடுக்கும் முடிவுகளில் எம்மை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது. இருந்தும் நான் எடுக்கும் முடிவுகள் தனி மனித சிந்தனைகளின் வெளிப்பாடுதானா என்பதில் நிச்சய ஐயம் உண்டு. உங்களது முடிவுகளில் வேறு…

உலக தாய்மொழித் தினம் 2017

எனக்கு இன்னும் அதிகமா ஞாபகம் இருக்கின்றது.அந்த வெளிறிய கண்கள், நரைத்த ஐதான கேசம், நரம்போடியிருந்த கைகள் கால்கள், கசக்கி போட்டிருந்த டிஸு போன்ற முகம் , நடையில் அதிக தளர்வு, நிதானமின்மை, என அடையாளப்படுத்தலுக்கு குறைவில்லாத தேகம். ”நான் உன்னோடு அதிக காலம் பழகி இருக்கிறேன். உன்னில் அக்கறை எடுத்து கொள்வதற்கு எனக்கு உரிமை உள்ளது….

குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா

ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும் மாறி மாறி பிரயாணம் செய்ய வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. இத்தேவையினால் அவனுக்கான நிரந்தர வதிவிடத்தின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. குறுகிய நாட்களுக்குள்…

எது பாலம்? – கவிதை ரசித்தல் 02

இன்று மன அமைதி தேடி ஆலயங்களையும் ஆச்சிரமங்களையும் தியான யோகா வகுப்புக்களை நுகர்கின்ற மானிடர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.சரி, உரிய இடங்களை அடைந்து விடுப்பவர்களின் மனங்களில் மன அமைதி குடிகொண்டு அவர்களின் வாழ்வு மாறிவிடுகிறதா? அங்கு செல்பவர்களின் பலர் தம்மைப்போலும் இவ்வளவு மானிடரா என்று அற்ப சந்தோசம் அடைகின்றனர். இந்த அற்ப சந்தோசத்தில்…

கேட்டல் இனிது.

எங்கு அறிவுரை கேட்பது ? யாரிடம் அறிவுரை கேட்பது ? எம்மை சரியாக வழிநடத்த கூடியவர்கள் யார் ? போன்ற கேள்விகள் இந்த தலைமுறையினரிடம் பரவலாக காணப்படுகிறது. மங்கிய ஒளியினை நம்பி அதன் வழி நடத்தலின் கீழ் சென்று தமக்கான சரியான பாதைகளை தவறவிடுகின்ற ஆட்கள்தான் இந்த தலைமுறையினர்களில் அதிகம். ஒருவேளை அப்படியான தவறான வழி…

தீராத பால்யம்.

மனிதன் ஒருவனின் ஆழப்பதிந்த நினைவுகள் என்று தோண்டி எடுக்கும் போது அந்த நினைவுகளில் பல அவனின் பால்யத்தை சுற்றியே இருக்கும் என்பது நிதர்சனம். பால்யம் தீராத கனவுகளின் பெட்டகம். எல்லாருக்கும் எல்லாமும் இந்த பருவத்தில் விதைக்கப்படுவதில்லை. விதைக்கப்பட்டவை எல்லாம் சரியானவையும் அல்ல. விதைக்கப்பட்டவைக்கும் விதிக்கப்பட்டவைக்கும் தீராக் கனவுகளின் பெட்டகத்திற்குமான போராட்டம் பால்யத்தை சுவைக்க வைக்கிறது. இந்த…

வடக்கு நாட்டார் இலக்கியங்கள்-அரிவி வெட்டு

ஒரு பேரூந்திலோ  அல்லது மோட்டார் சைக்கிளிலோ நகர்ப்புற வீதிகளில் செல்லும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் வித்தியாசமும் மாற்றமும் உணர்வீர்கள். விதவிதமான வான்முட்டும் கட்டடங்களும் தொழில்நுட்பமும் எம்மைச்சூழ விரிந்து கிடந்தாலும் நீண்ட முடிவில்லா வயல்களையும், பனந்தோப்புக்களையும், கொட்டில் வீடுகளையும் அதில் கொத்தி திரியும் கோழிகளையும் பார்க்கும்போது மனதின் ஓரத்தில் ஆனந்தமாய் இனம்தெரியாத ஒரு பூரிப்புவரும். கலை  இலக்கியம்…

இளமையின் முதுமை – கவிதை ரசித்தல் 01

இன்று ஒரு மனிதன் தன் சமூகம் சார்ந்த பார்வையை எவ்வாறு செலுத்துகிறான் என்ற கேள்விக்கு வினோதமான பதில்களை அறியக்கூடியவாறு உள்ளது. அவனின் ஒற்றை எண்ணம் தன்னை தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும். அதற்கான அவனின் ஏற்பாடுகள் மிக சுவாரஸ்யமானவை. வருங்காலம் என்ற எதிர்பார்ப்பிற்கு நிகழ்காலத்தை வெறுப்புடன் எதிர் கொள்கிறான். முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதற்கு வாலிபத்தை தொலைகிறான்….

Back to top