Brinthan Online

மீக்காயீல் உயிர்ச்சொல்

Year: 2017

நன்பெரியல் குறிப்புகள்  01 – 08

01. முதல் நாளுக்கு முன்னைய நாட்கள் சில கிழமைகளுக்கு முன்னர் காலியில் உள்ள ருமசலவிற்கு சென்றிருந்தேன். காடுகள் மலைகளின் நடுவே அமைந்த அழகிய கடற்கரை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் உப்புத்தண்ணீரில் ஊறினேன். அதிகளவான கூட்டம் இல்லாத கடற்கரை. அதே நாளில் தான் கொழும்பு உட்பட மேற்குப் பக்கம் தாழ் அமுக்கமும் கடும் மழையுமாக இருந்தது. இது…

என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/   102 Views

போ – ஹியூகோ – நான் மற்றும் கடவுள்

கடவுளின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் இரும்பு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி நான் வீதிக்கரை ஓரமாக தேய்ந்து தேய்ந்து ஊர்கிறேன். கடவுள் டீக்கடையில் நிற்பதாக எனக்கு முன்னால் இன்னொரு இரும்பு மூட்டையுடன் ஊர்ந்துகொண்டிருக்கும் ஆலன் போ சொன்னார். எனக்குப் பின்னால் ஊர்ந்து கொண்டிருந்த விக்டர் ஹியூகோவிற்கும் அதையே சொன்னேன். ஆலன் போ ஒரு சந்தி முடக்கில் இயலாமல்…

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள் உங்கள் கூக்குரல்களால் எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ” – எஸ். போஸ் ” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ” – காசுவோ இஷிகுரோ உன்னதம் இதழில் வெளிவந்த…

நகரத்தின் குறிப்புகள் –  03

நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். முன்னால் கூனியபடி தலைக்கு முக்காடு மாதிரி ஒன்றால் மூடி சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். பயணங்களின் போது…

குடிமைகள் –  சாதியமும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்.

ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர்  ஒருவரின் தேடல்.  வாசகர் ஒருவர்  இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத…

பொருட்காட்சி – இரவு ஒன்று முப்பது.

மணி இரவு ஒன்று முப்பது. குளிரூட்டப்பட்ட பேருந்திலிருந்து இறங்கி – பின்பக்கமாக சாப்பாட்டுக் கடைக்குள் நுழைவதற்காக நடந்தேன். முழு நித்திரைக் கலக்கத்தில் இருந்ததால் மந்தமான பார்வையில் இன்னொரு பேரூந்து எமக்கருகில் நிறுத்தப்பட்டிருந்தது. தனியார் பேரூந்து. மேலும் முன்னே நடந்து கடைக்குள் செல்வதற்கு முன்னர்- வழமையை விட அவ்விடம் அதிக சனக்கூட்டமாக இருந்தது , வெள்ளை தலைக்கவசத்துடன்…

முதல்ப் புனைவு

சரியோ பிழையோ – எப்போதுமே முதன்முதல் செய்தவற்றை மீட்டிப்பார்க்கும் போது ஒரு வித சந்தோசம் உருவாகும். அதுவும் முதன்முதலில் உருவான கலைப்படைப்பு ஒன்றை மீட்டுதல் அலாதியான சந்தோசம். சரியாக இதே நாளில்த் தான் எனது முதலாவது கதையினைச் சொன்னேன். இது மிகவும் ஆரம்ப வாசிப்பு நிலையில், கதையா இல்லையா என்றெல்லாம் தெரிந்திராத போது எழுதப்பட்டது. எனது…

நிறம் தீட்டுவோம் – ஆவணப்படம்.

பொதுவாகவே நான் சினிமா பார்ப்பது  குறைவு. முக்கியமான படைப்புகளையும் பரிந்துரைகளையும் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வேன். இருந்தும் சமீபகாலமாக சினிமாவின் முக்கிய பிரிவான ஆவணப்படங்களை விரும்பிப்பார்க்கிறேன். எழுத்திலக்கியத்தில் கட்டுரைகளுக்கு அதாவது non- fictionsக்கு இருக்கின்ற அதேயளவு கணத்தினை இந்த ஆவணப்படங்களில் காண்கிறேன். அதே போல நாவல் ஒன்றினை வாசித்துமுடித்த திருப்தியினையும் பெறுகின்றேன். எனக்கு சினிமா மீதிருந்த அவநம்பிக்கையை ஆவணப்படங்கள்…

ஸீரோ டிகிரியும் மறாவும்.

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியில் ஆறாவது அத்தியாயத்தியாயத்தில் இரண்டு கதைகளை ஒன்று விட்டு ஒன்றாக வசனங்களை மாற்றி மாற்றி எழுதியிருப்பார். ஸீரோ டிகிரி வாசித்து மாதக்கணக்கு ஆனாலும் மீண்டும் இதை நினைவுபடுத்த வேண்டிய தேவையை உணர்கிறேன். ஒரு நடிகையைப்பற்றியும் தீவிரவாதி ஒருத்தர் தனது சகாவால் கொள்ளப்பட்டது பற்றியும் – குறுகிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.நாவல் முழுவதும் பின்நவீனத்துவத்தின்…

Back to top